10 அணிகள் கலந்து கொள்ளும் ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நிறைவுபெற்றுள்ளது. மும்பை அணியால் 15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீர்ராக உள்ளார். ஏலம் எடுக்கபட்ட அணிகள் அனைவரும் புதிய அணிகளின் வரிசையாக இணைந்து வருகின்றனர். சென்னை, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளில் விளையாடிய அஸ்வின் முதன்முறையாக இந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார்.
இதனால் அந்த அணியின் ஜெர்சியில் ராஜஸ்தான் அணிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவரைப் போலவே 10 ஐபிஎல் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களும் அந்த அணிகளுடான பயணத்தை தொடங்கியுள்ளனர். இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் போட்டிக்குப் பிறகு ஐபிஎல் அணிகளுடன் இணைகின்றனர். விரைவில் ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, பெங்களூரு அணியின் கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது. விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகிய பிறகு, அவருக்கு பதிலாக அந்த அணியின் பொறுப்புக்கு தகுதியானவரை நியமிக்க பெங்களுரு அணி முடிவெடுத்துள்ளது. இப்போதைய நிலையில் ஐபிஎல் ஏலம் மூலம் எடுக்கப்பட்டுள்ள பாப் டூபிளசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வேல் கேப்டன் ரேஸில் இருக்கின்றனர். அதில் பாப் டூபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுரு அணியும் தங்களின் புதிய கேப்டன் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளது.
மேலும் படிக்க | INDvsWI: இரண்டாவது டி20-ல் என்ன என்ன மாற்றம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR