டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு..! எந்தெந்த தேதிகள் தெரியுமா?
டாஸ்மாக் கடைகளுக்கு இம்மாதம் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய தேதிகளில் டாஸ்மாக் இயங்காது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கலைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இம்மாதம் மொத்தம் மூன்று நாட்கள் டாஸ்மாக் இயங்காது. இந்த ஆண்டு பொங்கல் தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், பொங்கல் பண்டிகையின்போது வரும் திருவள்ளுவர் தினத்தன்று, அதாவது ஜனவரி 15 ஆம் தேதி டாஸ்மாக் செயல்படாது. அடுத்தபடியாக ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் குடியரசு தினம் நாளில் மதுக்கடைகள் செயல்படாது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு
அடுத்தபடியாக ஜனவரி 28 ஆம் தேதி வள்ளலார் நினைவு நாளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் பொங்கலுக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வீட்டு வசதி மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, " கோவை மாவட்டத்தில் 1,537 ரேஷன் கடைகளில் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கம், முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றன.
இதற்காக சுமார் ரூ.122 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருள்கள் குடும்ப அட்டைதாரர்கள் யாருக்கும் விடுபட்டு விடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 14-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும், சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். பொங்கல் பண்டிகை விற்பனைக்காக டாஸ்மாக்கில் இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு. டாஸ்மாக்கில் விற்பனையாகும் தொகை சரியாக கணக்கு காட்டப்படுகிறதா? இல்லை தவறான இடத்திற்கு செல்கிறதா? என்பதை கண்காணிக்கவே வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது.” என தெரிவித்தார்.
மேலும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ