தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
கிழக்கு திசைக்காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவுவதால் தமிழகத்தில் வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக விளக்கமளித்துள்ளது. பனிப்பொழிவு குளிரின் தாக்கம் உதகையில் சற்று அதிகம் நிலவி வருவதாகவும், உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்சமாக உதகை மாவட்டத்தில் 5 புள்ளி 2 டிகிரி செல்சியசும், வால்பாறை பகுதிகளில் 11 புள்ளி 5 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என கூறியுள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.