தமிழத்தில் இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படும்: அபிராமி ராமநாதன்
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30% வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.
இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இன்று முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன்:-
இன்று முதல் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.