உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் பகுதியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், புதிதாக கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில், செயல்படுத்தப்படும் விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 440 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், இத்திட்டத்தில், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 30 வயதுக்கு மேலானவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டம்!


மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 15 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 45,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அதில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 4045 குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அதில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 450 குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சக்ரபாணி கூறினார்.


இருப்பினும், கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்த்தவர்களுக்கு கார்டு கொடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பயனாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு வழங்கல் துறை ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், " தமிழகத்தில், 2021 மே, 7 முதல், 2023 ஜூன் 30 வரை, 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பில் உள்ள  ரேஷன் கார்டுகள் அடிப்படையில், புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால்,  ரேஷன் கார்டு வினியோக பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 


வெள்ளம் பாதித்த துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. செல்போன் எஸ்.எம்.எஸ்: ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள், புதிய ரேஷன் கார்டுகளை, வட்ட வழங்கல் அலவலகங்களுக்கு நேரில் சென்றோ, தங்கள் குடும்ப உறுப்பினரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின், கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான FD... இரண்டில் எது பெஸ்ட்... ஒரு ஒப்பீடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ