தமிழகத்தில் இன்று முதல் Sep 30 வரை Ration பொருட்களுக்கான Token விநியோகம்!!
அக்டோபர் 1 முதல், ரேஷன் கடைகளில் தங்கள் டோக்கனில் உள்ள நாள், நேரத்திற்கேற்ப மக்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் (Ration Tokens) இன்று முதல் வழங்கப்படுகின்றன. இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் வாங்க மக்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குவர். இதைத் தொடர்ந்து அக்டோபர் 1 முதல், ரேஷன் கடைகளில் (Ration Shops) அத்தியாவசியப் பொருட்களுக்கள் விநியோகிக்கப்படும்.
தங்கள் டோக்கனில் உள்ள நாள், நேரத்திற்கேற்ப மக்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று (Corona Pandemic) காரணமாக கூட்டத்தைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரவர் அவரவரது நாள் மற்றும் நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டால், ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை பெருமளவில் தவிர்க்கலாம். ஆகவே தங்களுக்கான நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வருமாறு மக்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
ரேஷன் கடைகளில் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் (Biometric) முறையும் அமலுக்கு வருகிறது. இதனால், இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்: தமிழக அரசு அறிவிப்பு
இதுவரை இருந்த முறையில், குடும்ப உறுப்பினர்களோ, அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களோ, ரேஷன் அட்டையைக் (Ration Card) காட்டி பொருட்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள். இதனால் சில ஏமாற்று வேலைகளும் முறைகேடுகளும் கூட ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இதைத் தடுக்கும் பொருட்டு, ரேஷன் அட்டைதாரர்களின் கை ரேகைகளை பதிவு செய்து, அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்களை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.
ஆனால், பயோமெட்ரிக் முறையில் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதால், ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் இருக்கும் பல அலுவலகங்களில் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்போது இது ரேஷன் கடைகளுக்கு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது.
எனினும் அக்டோபர் 1 முதல் வரவுள்ள டோக்கன் திட்டம் பலரால் பாராட்டப்பட்டுள்ளது.
ALSO READ: 80 கோடி மக்களுக்கு ஏப்ரல்-நவம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள்: அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR