சென்னை: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேச தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். அப்போது கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளதையும் எடுத்துரைக்க உள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக மேகதாதுவில் அணை கட்ட ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,  கடிதம் எழுதிய கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தெரிவித்திருந்தார்.அதனால், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் ஒத்துழைப்பு அளிக்கும் படியும் கர்நாடக மாநில முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். 


இன்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், 4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பாக அவர் நேற்று ட்வீட் செய்திருந்தார்


பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் இந்த அணை, அந்த நகரத்திற்கு வெகுதொலைவில் கட்டப்பட உள்ள நிலையில், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக அணைக் கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு  ஏதும் ஏற்படாது என்ற கருத்தை ஏற்க இயலாது என்று தெளிவுபட கூறியுள்ளார்.


குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில், தற்போது மேகதாது அணைத் திட்டத்தை ஏற்க முடியாது என்றும், தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு நிலைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Also Read | தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR