தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய கொரோனா மரணம் மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் குறைந்துவந்த கொரோனா தொற்று எண்ணிக்கையின் எதிரொலியாக தமிழகத்திலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | Live Update: 2022 ஜூன் 16 இன்றைய முக்கிய செய்திகள் உடனுக்குடன்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 476 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,58,445 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,938 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக உள்ளது. இதுவரை தொற்றிலிருந்து மொத்தம் குணமானவார்களின் எண்ணிக்கை 34,18,481 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியல் இதோ:
மேலும் படிக்க | TN 10th result 2022: நாளை வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - நேரம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR