தமிழ்நாடு SSLC முடிவுகள் 2022 நாளை வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுதினர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!
ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளும் அதனை உறுதி செய்திருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் எந்த மாற்றமும் இருக்காது. முன்பு அறிவிக்கப்பட்ட தேதியான ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்திருந்தனர். அதன்படி நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை 9 மணிக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.
மேலும் படிக்க | 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... எழுதாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
மாணவர்கள் தங்களின் பொதுத்தேர்வு முடிவுகள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/, http://tnresults.nic.in/ என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதுதவிர, dge.tn.nic.inand dge.tn.gov.in என்ற இணையப் பக்கம் வழியாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR