Madurai News: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ராமநாத சுவாமி கோயிலில், காளிதாஸ் என்ற இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்தார். மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐரோப்பா பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காளிதாஸ். இவருக்கும் ஐரோப்பா, செக் குடியரசை சேர்ந்த கானாபம்குலோவா என்ற பெண்ணுக்கும் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


திருமணம் முடிந்த பின்னர் இந்த ஜோடிகள் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது இவர்களை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தபடி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் வேலை செய்த போது 2 ஆண்டுகள் இந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்து முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாகவும் இளைஞர் காளிதாஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ