தமிழ் பெயர் பலகை குறித்த அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு அலுவலகங்கள்,  தனியார் கடைகளின் பெயர் பலகைகளில் தமிழக அரசின் அரசாணை படி தூய தமிழில் பெயர் எழுத வேண்டும் என திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.


தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார்  கடைகள்,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில்  தமிழக அரசின் அரசாணை படி தூய தமிழில் பெரிய அளவிலும், அதற்கு கீழே சிறிய அளவில் பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ அரசின் அரசாணைய சுட்டிக்காட்டி, இந்த அரசாணையை முறையாக அமல்படுத்தாததால், கடைகளில், ஸ்டோர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், என ஆங்கில வார்த்தைகளை பெரிதாக தமிழில் எழுதி உள்ளனர் என்றும், இவைகளை மாற்றி அங்காடி, அடுமணை, மருந்து கடை, என. தமிழில் எழுத உத்தரவிட வேண்டும் எனவும்  திருமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.


நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. 


விசாரணையின் போது இந்த மனு தொடர்பான தமிழக அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர், மார்ச் 8-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.