மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நேற்று திங்கள்கிழமை அமல்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் தேதியை இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதற்காக ஒரு இணைய போர்டல் வழக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறி உள்ளது. இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை பெற உதவும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரதமர் போட்ட பதிவு... கலாய்த்த சுப்பிரமணிய சுவாமி! - அரசியல் களத்தில் பரபரப்பு!


உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X தளத்தில், "இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றொரு உறுதிப்பாட்டை அளித்து, மற்ற நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.  கடந்த மாதம் பேசி இருந்த அமித் ஷா இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி இருந்தார். அதே போல தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  



இந்த குடியுரிமை சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது, " 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மோடி அரசு அறிவிக்க நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் ஆகியுள்ளன.  தனது அரசு வணிக ரீதியாகவும், நேரக் கட்டுப்பாடாகவும் செயல்படுவதாக பிரதமர் கூறி வருகிறார். ஆனால் சிஏஏ விதிகளை அறிவிக்க எடுத்துக்கொண்ட நேரம் பிரதமரின் அப்பட்டமான பொய்களுக்கு மற்றொரு நிரூபணம்" என்று கூறி உள்ளார். 


அதே போல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்"  என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து பேசியுள்ளார் விஜய்.



மேலும் படிக்க | 'பாஜகவின் நாசகாரச் செயல்...' CAA-வை தமிழகத்தில் கால்வைக்க விடமாட்டோம் - ஸ்டாலின் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ