MK Stalin CAA: முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில், "ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர் (சாந்தனு தாக்கூர்).
"CAA-வை கால்வைக்க விடமாட்டோம்"
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியரிமை திருத்த மசோதா (CAB) சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக.
2021ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA-வை கால்வைக்க விடமாட்டோம்" என உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க… https://t.co/fePoodTxQq
— M.K.Stalin (@mkstalin) January 31, 2024
'இன்னும் 7 நாட்களில் CAA'
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) மேற்கு மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஒன்றி இணையமைச்சரான சாந்தனு தாக்கூர் கூறுகையில், "ராமர் கோவில் திறக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் மேற்கு வங்கத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்" என தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், அவர் பேசுகையில், "உங்களிடம் வாக்காளர் மற்றும் ஆதார் அட்டை இருந்தால், நீங்கள் இந்த நாட்டின் குடிமகன் என்றும், வாக்களிக்க முடியும் என்றும் இந்த மாநில அரசு (திரிணாமூல் காங்கிரஸ்) கூறுகிறது. அப்படியென்றால் இங்கு ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது ஏன்? இவர்களின் வாக்கு பறிக்கப்பட்டது குறித்து முதல்வர் (மம்தா பானர்ஜி) பதில் சொல்ல வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | விஜய் வருகையால் தமிழக அரசியலில் சுனாமி ஏற்படும் - பெரியார் சரவணன்
திங்கட்கிழமை (ஜன. 29) அன்று கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போதும்,"நான் நேற்று (அதாவது, ஜன. 28) கூறியதில் உறுதியாக இருக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். இது எனது உத்தரவாதம்" என பேசியிருந்தார்.
CAA எதிர்ப்பு
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,"தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தெருவில் இறங்கி போராடியவர்கள் நாம். அவர்கள் (பாஜக) இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கோஷமிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தேர்தலுக்கு முன்பு அதை அரசியலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள்; அவர்கள் இந்த நாட்டின் வாக்காளர்கள் இல்லை என்றால், மத்திய அரசின் திட்டங்களால் எப்படிப் பயனடைகிறார்கள்?" என கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
CAA என்றால் என்ன?
2019ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ