அரசு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியலில் இயங்கி வரக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதர அர்ஜுனா தெரிவித்த இந்த கருத்து கடந்த மாதங்களில் திமுக கூட்டணியில் ஒரு பெரும் பேசுபொருளாகவே ஆகி இருந்தது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தன்னுடன் கூட்டணி சேர்ந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சியினருக்கு அதிகார பகிர்வு என கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசியிருந்தார். குறிப்பாக இந்த விஷயத்தை பேசும்போது தான் ஒரு பொலிட்டிக்கல் அணுகுண்டை தற்போது வீசப்போவதாக முன்கூட்டியே தெரிவித்து விட்டு தான் இந்த விஷயத்தை பேசி இருந்தார். இது குறித்து ராதிகா சரத்குமார் பேசி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Vijay Speech | விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடி


கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்வு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் வடகோவை குஜராத் சமாஜில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் குழந்தைகளுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார், கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் தீபாவளி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், பெண்களுக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார். டாஸ்மாக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசு டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதுகுறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு  நிர்ணயித்திருப்பதாக கேள்விப்பட்டதாகவும் அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தது தனக்கு ஆச்சரியம் அளித்ததாகவும் கூறினார்.


சமத்துவ மக்கள் கட்சிக் கொடியின் வண்ணத்தை போன்றே தமிழக வெற்றிக் கழகக் கொடியின் வண்ணம் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மங்களகரமான நிறம் என்று குறிப்பிட்ட அவர், விஜயும் அதே வண்ணத்தை பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம் என்றார். விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் "ஒன் மேன் ஷோவாக" காட்டியிருக்கிறார் என்றும் கூறினார்.


மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ