தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும் என்றும் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 


ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்:-


தமிழ்நாட்டில் இப்போது ஆரோக்கியமற்ற சூழ்நிலை உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டும். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தை வைத்து சிலர் ஆட்சிக்கு வர முயல்வது முற்றிலும் தவறானது. 


முதல்வராக இருந்த ஜெயலலிதா சினிமா நட்சத்திரமாக இருந்து அபரிதமான சொத்துக்களை சேர்த்தார். எனவே ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அவசியம் அவருக்கு இல்லை. ஜெயலலிதாவுடன் இருந்து ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா.


இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.