சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தினகரன் முன்னிலை வகித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 117 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை, வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளதை காட்டுகிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.