சென்னை: சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக (Tamil Nadu Arasu Cable TV chairman) குறிஞ்சி என்.சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும் போது, "நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் என்.சிவக்குமார் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டசபை தேர்தலில் அதிக பெரும்பான்மையை பெற்று திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் வரிசையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு முதல் கட்டமாக காலியாக இருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு குறிஞ்சி என்.சிவகுமார் (Kurinji N. Sivakumar) அவர்களை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) உத்தரவிட்டார். 


 



அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி:
இதனையடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் ஒரு பகுதியாக ஓடிடி தளங்களை அரசு கேபிள் மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என என்.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். 


ALSO READ | சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு– இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தனியார் செட்டாப் பாக்ஸ் எச்சரிக்கை: 
பொதுமக்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்களை கொடுக்காமல், லாப நோக்கத்திற்காக தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்கும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும எனவும் எச்சரித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR