மார்ச் 19 முதல் 22 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் -சபாநாயகர் அறிவிப்பு
மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
2018-19 ஆம் நிதியாண்டின் பட்ஜெடை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் காலை 10.30 மணிக்கு தொடங்கிய 1.30 மணிக்கு முடித்தது. மொத்தம் 157 நிமிடம் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
2018-19 ஆம் நிதியாண்டிக்கன பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவை தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் சுமார் 3.30 மணிக்கு அவை கூடியது.
அவை தொடங்கியதும் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் தனபால் கூறியது,
“பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும்.நாளை அடுத்து தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தள்ளிவைக்கப் பட்டது. மேலும் 4 நாட்கள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2018-19 ஆம் நிதியாண்டிக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும்” எனக் கூறினார்.