அண்ணாமலை ஆரம்பத்திலிருந்து புத்திசாலித்தனமாக தான் சிறந்த ஆள் என்ன சொல்லக்கூடிய நபர்களை காசு கொடுத்து உடன் வைத்திருக்கிறார். தகுதியான நபர்களை வைத்து பணி செய்ய முடியாமல் அனைத்தும் அண்ணாமலையே செய்ய நினைப்பதால் நிர்வாக திறமையில் அவர் பூஜியம் என்று என நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் காஞ்சிபுரத்தில் வழக்கத்தீஸ்வரர் கோயில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று முன் தினம் எஸ் வி சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!


இந்நிலையில் மேல்முறையீடு செய்ய வழக்கு பத்திரத்துடன் காஞ்சிபுரம் வள்ளல்பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர்  கோவிலுக்கு எஸ்வி சேகர் வருகை தந்து சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து வழிபட்டார்.  பின் செய்தியாளரை சந்தித்த எஸ் வி சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதுசு, அவர் போலீஸ்காரர் என்பதால் காவல் நிலையத்தை போன்று கட்சியை நடத்துகிறார் அவர் கண்ணை தெரிபவர் அனைவருமே திருடர்கள் மட்டுமே தெரிவார்கள் நல்லவர்கள் தென்படமாட்டார்கள், பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழ்நாட்டில் கடை கோடி தமிழன் வரை எடுத்து செல்ல அண்ணாமலை தவறிவிட்டார், எப்போதும் ஒரு கட்சித் தலைவர் தமக்குத்தானே தானே பேசிக் கொள்ளக் கூடாது. 


அதில் எந்த மாற்றமும் வராது, புதிதாக ஒரு வருடம் பேசி பழக வேண்டும், அண்ணாமலைக்கு வாய் மட்டும்தான் வேலை செய்கிறது என்றால் சரியா இருக்காது, மேலும் அண்ணாமலை ஆரம்பத்திலிருந்து புத்திசாலித்தனமாக தான்தான் சிறந்த ஆள் என்ன சொல்லக்கூடிய நபர்களை காசு கொடுத்து உடன் வைத்திருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் என்பவர் தகுதியான ஆட்களை வைத்து பணி வாங்க வேண்டும் அதுதான் நிர்வாக திறமை அனைத்தும் அண்ணாமலையே செய்ய வேண்டும் என நினைத்தால் நிர்வாக திறமையில் விஷயத்தில் அண்ணாமலை பூஜியம். நடிகர் விஜய் அவர்கள் வலுவான அடித்தளத்தோடு தான் அரசியலுக்கு வருகிறார், முதல் முதலில் அரசியலுக்கு வரும்போது கட்சி பெயர் வெளியிட்ட போது வாழ்த்து தெரிவித்ததோடு கட்சிப் பெயரில் ' க் ' இருக்கா இல்லையா என கேட்ட பொழுது தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ளும் பண்பு இருப்பதால் நிச்சயம் அவர் அரசியலில் வெற்றி பெற அதிக உள்ளது. 


ஆகையால் அவர் ஜோசப் விஜய் என்று சொல்லக்கூடாது ஜனநாயக தேர்தலில் யார் வேண்டுமானாலும் மதம் பாகுபாடு இன்றி போட்டியிடலாம்.  மேலும் நடிகர் விஜய் 2026 தேர்தல் மட்டுமே சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். ஆகையால் அவர் கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டிய உள்ளதால் அதற்காக பணிகள் முயற்சிக்கிறார். அதிக இளைஞர் பட்டாளம் கொண்ட நடிகர் விஜய் தேர்தலில் போற்றி விட்டு வெற்றி பெறுவாரா என்று பின்பு தான் தெரியும் என அவர் பேட்டியளித்தார்.


மேலும் படிக்க | தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அதிரடி திட்டங்களை வழங்கியுள்ள தமிழக அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ