பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5-வது நாளாக பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் நடைபயணத்தை தொடங்கினார். புதுஆயக்குடி, சிவகிரிப்பட்டி, காலேஜ்மேடு, பஸ்நிலையம், காந்திரோடு வழியே பழனி தேரடி பகுதிக்கு வந்தார். முன்னதாக நடைபயணமாக வந்த அவருக்கு பா.ஜ.க.வினர் மேளதாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுக பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதோடு வாலிபர்கள், இளம்பெண்கள் பலரும் அவருடன் 'செல்பி' எடுத்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் தேரடி பகுதியில் நின்று அவர் பேசியதாவது, தமிழகத்தில் பா.ஜ.க.வின் இந்த யாத்திரை மிகவும் எழுச்சி பெற்றதாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க.வை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் தற்போது ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். எந்த கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க.வால் மட்டும்தான் லஞ்சம் இல்லாத வளர்ச்சியை கொடுக்க முடியும். பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக 15 ஆண்டுகள் மட்டும் தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் நாட்டின் வளர்ச்சி 200 ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அதற்கான விதையை விதைத்து வருகிறது. மோடி வந்த பிறகு தான் ஆட்சி எந்திரம் ஏழை மக்களின் வளர்ச்சியை நோக்கி சென்றது. அதாவது முதல் 5 ஆண்டு கால ஆட்சி ஏழைகளை நோக்கி சென்றது. 2-வது 5 ஆண்டு கால ஆட்சி என்பது வளர்ச்சியை நோக்கி உள்ளது.


மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை


பி.ஜே.பி மீது தப்பா கேஸ் போடுபவர்களை நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது. பா.ஜ.க கட்சி மீது இது வரை 181 வழக்குகள் தவரா போட்டுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 17 அதிகாரிகள் இருக்காங்க வழக்கு போடுவதற்க்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்கிறோம்.  57 லட்சம் பெண்களுக்கு 1000 ரூபாய் பணம் கிடைக்கவில்லை, அமைச்சர்கள் ஏரிய உள்ளே வரட்டும் துடைப்பாகட்டை தயாராக வச்சுருக்கோம் என பெண்கள் தயாராக உள்ளனர்.  பழனி எம்.எல்.ஏ செந்தில் குமார் அலுவலகத்திலேயே இருந்தது இல்லை பொது மக்களின் குறைகளை கேட்டதில்லை, 2024 ல் சட்டமன்ற தேர்தலும்,  பாராளுமன்ற தேர்தல் நடந்தால், உங்களின் கை கல் நேர்மையை நோக்கி செல்ல வேண்டும்.  உலகின் 5-வது பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. வரக்கூடிய 5 ஆண்டு கால ஆட்சி என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியதாக இருக்க உள்ளது. 


அதற்கான கட்டமைப்பை உருவாக்க பணி நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் குடும்ப ஆட்சியின் கீழ் வந்துள்ளனர். இவர்களுக்கு ஏழைகளின் கண்ணீர் தெரிவதில்லை. தமிழகத்தில் தி.மு.க. அழிந்து கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் காணாமல் போய்விடும். தமிழகத்தை பொறுத்தவரை அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய கட்சி தி.மு.க.. குடும்ப அரசியல் வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்தால் தி.மு.க.வுக்கு வேலை இல்லை. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்பவர்களுக்கு இடம் இருக்காது என்பதால்தான் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் எல்லாம் தற்போது ஒன்று கூடி கூட்டணியை உருவாக்கி உள்ளனர். வருகிற நாடாளுமன்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே நாம் அதில் பிழை செய்ய கூடாது. 


தமிழகத்தில் அதிக வருவாய் கொண்டது பழனி கோவில். இதன் சொத்து மட்டும் சுமார் ரூ.1500 கோடி. வருவாய் ரூ.200 கோடி. ஆனால் கோவில் கோசாலையில் 17 பசுக்கள் உணவின்றி இறந்ததாக கால்நடை டாக்டர் அறிக்கை கொடுத்து இருக்கிறார். அதேபோல் 218 பசுக்கள் தி.மு.க.வினருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கோவில் சொத்துகளை பாதுகாக்க வக்கில்லை என்றால் அரசு பதவியில் இருந்து விலக வேண்டும். அதேபோல் கோவில் சார்ந்த மிராஸ் பண்டாரங்களை கோவில் அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துகிறார்கள். எனவே முருகப்பெருமானுக்கு எதிராக ஆட்சி செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இந்து கோவில்களின் சொத்து மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி. இதை வைத்து எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொடுக்க முடியும். எனவே ஊழல்வாதிகளை விட்டால் தமிழகத்தை சுரண்டி விடுவார்கள். 


தமிழகத்தில் எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ, அப்போது இந்தியை திணிக்கிறார்கள் என தி.மு.க.வினர் கூறுகின்றனர். இந்தியால் தமிழ் மொழியை அழிக்க முடியுமா? செழுமையும், ஆளுமையும் கொண்ட மொழி தமிழ். அதனால் தான் பிரதமர் எங்கு சென்றாலும் தமிழில் உரையாடி, உணர்வு பூர்வமாக பேசுகிறார். எனவே வரக்கூடிய தேர்தலில் மக்கள் சரியான முடிவெடுத்து மீண்டும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசினார்.


மேலும் படிக்க | கட்டணமில்லா பேருந்து பயணம்... புதுமைப்பெண் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை.. அசத்தும் திமுக அரசு! ஓர் அலசல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ