சோபியா மீதான புகாரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை திரும்ப பெறவேண்டும் :ஸ்டாலின்
பாஜக-விற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சோபியா மீதான புகாரை பாஜக தலைவர் தமிழிசை திரும்ப பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.
பாஜக-விற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சோபியா மீதான புகாரை பாஜக தலைவர் தமிழிசை திரும்ப பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடத்து தனக்கு ஜாமின் வழங்குமாறு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார். பின்னர் மாணவி சோபியாவிற்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. இதற்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,
#பாசிசபாஜகஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!
மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.