Tamil Nadu State Budget Session: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.  இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளனர். இந்த சமயத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் இந்த பட்ஜெட் மீது உள்ளது.  தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் 2024 - 25 தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு நடைபெற பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெரும் நோக்கில் ஆளும் அரசான திமுக களத்தில் இறங்கி உள்ளது. மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தாக்கல்? என்னென்ன அறிவிப்புகள் வெளியாகிறது?


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.  அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்தார். இதில் நிறைய திட்டங்களில் மக்கள் நேரடியாக பயன் பெற்றனர். தேர்தலுக்கு முன்பு திமுக கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை. தற்போது 1.5 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் 'கலைஞர் மகளிர் உரிமை திட்டம்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற தொடர் செலவினங்களுக்கு நிதி கொண்டு வரும் வகையில் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.  


மேலும் இந்த 2024 பட்ஜெட்டின் முக்கிய நோக்கம், செலவினங்களுக்கு ஏற்ப வருமானத்தை அதிகரிக்க செய்வது ஆகும்.  தமிழக அரசின் நிதி சுமையும் தற்போது அதிகளவில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவினம் ரூ. 3,08,056 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வரை வருவாய் மற்றும் செலவு ரூ. 1,96,781.57 கோடியாக மட்டுமே இருந்தது.  மேலும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான பிப்ரவரி 12ம் தேதி அவரது உரையில், கடந்த ஆண்டு வந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு பின்பு மாநிலம் நிதி ஆதாரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு ரூ. 2,028 கோடி செலவிட்டுள்ளது. 


இந்த சூழலில், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), வாகனங்கள் மீதான வரிகள், முத்திரைகள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான VAT, மாநில கலால் வரிகள் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  சமீபத்தில் தமிழக அரசு மதுபானங்கள் மீதான விலையை அதிகரித்தது.  அதே போல அடுக்குமாடி குடியிருப்புகளின் பதிவுக் கட்டணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், அரசுக்கு கூடுதல் நிதியை கொண்டு வரும். மக்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாத வகையில் பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | மக்கள் நீதி மய்யத்தை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது ஏன்? காங்கிரஸ் வைத்த டிவிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ