நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில், விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து கோவை சூலூர் தொகுதியில் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், "நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். 


கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் மார்ச் 31, 2017-க்கு முன் பெற்ற கடன் ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறிதி அளித்தார்.


மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரும் மாநிலம் தமிழகம்’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைப்பெற்று வரும் நிலையில் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19-ஆம் நாள் நடைபெறுகிறது. இதேநாள் அன்று தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 


இந்நிலையில் இடைத்தேர்தல் நடைப்பெறும் சூலூர் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள் நெசவாளர் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.