முதல்வர் பழனிசாமி, கன்னியாகுமரி சென்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக சென்னை திரும்பியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகின்றார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.


இதனையடுத்து கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.  இந்நிலையில் கன்னியாகுமரி சென்ற தமிழக முதல்வர், தான் சென்ற விமானத்தில் எற்பட்ட இயந்திர கோளாறு காரணாமக சென்னை திரும்பினார். 


முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் காலையிலேயே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். விமானம் சென்று கொண்டிருக்கும் போது  பாதியிலேயே இயந்திர கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்டது. 


இதனையடுத்து உடனடியாக முதல்வர் சென்னை திரும்பினார். தற்போது  மீண்டும் தூத்துக்குடி செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்று, பின்னர் குமரிக்கு கார் மூலம் செல்வார் என தெரிகிறது.