கமலுக்கு 64 வயதாகிவிட்டது. திரைத் துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி தாக்கு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஆட்சி அரியணையில் இருக்கும் அதிமுக-வுக்கும் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமலும் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர். 


இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கமல் தனது படத்திற்கு (விஸ்வரூபம் விவகாரம்) பிரச்னை வந்தபோது இந்த நாட்டை விட்டு போகிறேன் என்று சொன்னார். இவர் மக்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை கண்டுவிடுவார்?. தனது பிரச்னையைக் தீர்க்க முடியவில்லை என்று பயந்து போனவரால் மக்கள் பிரச்னையை எவ்வாறு தீர்க்க முடியும்?. 


‘கமலுக்கு 64 வயதாகிவிட்டது. திரைத் துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை. இப்போது அரசியலில் அவர் நாடகம் நடத்தி வருகிறார். திரைத் துறையில் 40 ஆண்டுகாலம் நடித்த பிறகே, அவர் எடுபடவில்லை. அப்படியிருக்க அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறாது' என்று கடுமையாக சாடியுள்ளார்.


சில நாட்களுக்கு முன்னர் கமல், தனது 64வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். ஆழ்வார்பேட்டையில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கமல், ‘வருகின்ற 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக இருப்போம்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.