சிறுபான்மையின மக்களை காத்து வரும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது அதிமுக என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல், பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு என தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றன. 


அந்த வகையில் இன்று நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக மேலப்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சாரத்தின்போது மக்களிடன் பேசிய முதல்வர் பழனிசாமி, “எந்த திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அதை மட்டுமே அறிவித்து  நிறைவேற்றி வருகிறது அதிமுக என தெரிவித்தார். மேலும் திமுக தேர்தல் அறிக்கை பொய்யான, போலியான அறிக்கை; அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை  நிறைவேற்றி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள் மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் மக்கள் அமைதியாக வாழமுடியும் என்று குறிப்பிட்டு பேசினார்.


மேலும், சிறுபான்மையின மக்களை காத்து வரும் அரசாக அதிமுக அரசு இருந்து வருவதாகவும், ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு  நிறுத்தியபோது, சிறுபான்மையின மக்களின் கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு உதவி செய்ததாகவும், தமிழகத்தில் ஏழைகள் இல்லாத  நிலையை உருவாக்க அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.