மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழு எதிர்கொள்ளும் சவால்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்கான ஒருநாள் கருத்தரங்கம் பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் மூலம் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர்கள், கல்வி அமைப்பு பிரதிநிதிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,
"இந்தியா முழுக்க தேசிய கல்வி கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். ஒட்டுமொத்த கொள்கையும் கல்வி செயல்பாட்டை எழுத்தறிவு, எண்ணறிவு, வேலைத்திறன் என சுருக்கி விடுகிறது. 


இவையனைத்தும் தேசிய திட்டங்கள்தான்...


மாநில கல்வி கொள்கை வகுக்கும் போது 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாநில பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் NAAC-ஐ தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | துணை முதலமைச்சர் ஆகிறேனா? உதயநிதி அதிரடி பேட்டி!


ஒற்றை பண்பாட்டு தேசத்தை கட்டமைக்கும் இந்திய அரசின் நோக்கத்தை முறியடித்து ஒட்டுமொத்த மனித வளர்ச்சியை முன்வைத்து மாநில கல்வி கொள்கை அமைய வேண்டும். மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவில் உள்ள அதிகாரிகள் ஒன்றிய அரசின் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். தேசிய கொள்கையின் சாரத்தை உள்ளடக்கியது தான் 'இல்லம் தேடி கல்வி', 'நான் முதல்வன்', 'மாதிரி பள்ளி' போன்ற திட்டங்கள். சமச்சீர் கல்வி கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இது எதிரானது. மாதிரி பள்ளி திட்டத்தை கைவிடுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.


மத்திய அரசை நம்ப கூடாது


கல்வி கொள்கை வகுக்கும் குழுவை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டின் சுயமரியாதை மரபின் அடிப்படையில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கல்வி கொள்கை குழு இங்குள்ள பேராசிரியர்கள், கல்வியாளர்களை ஆலோசிக்காமல் அறிக்கை தயாரிக்கிறது. அது தான் எங்களுக்கு கவலையாக உள்ளது.


காமராஜர் போல அரசியல் திறத்துடன் ஸ்டாலின் செயல்பட வேண்டும். இந்திய அரசை நம்பாமல் மாநில அரசு கல்விக்கான நிதியை திரட்டிக் கொள்ள முடியும். அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் மாநிலத்துக்கு என ஒரு கொள்கையை உருவாக்க அதிகாரம் உள்ளது" என தெரிவித்தார். 


கடந்தாண்டு அமைக்கப்பட்டது


மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கென தனி கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்தாண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் முதலில் 13 உறுப்பினர்களுடன் இந்த குழு அமைக்கப்பட்டது. பின்னர், இக்குழுவின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன், உதயசந்திரன் ஐஏஎஸ் மீது குற்றஞ்சாட்டி அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, இரண்டு உறுப்பினர்களை பள்ளிக்கல்வித்துறை அந்த குழுவில் நியமித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல்? கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ