வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களில் முகவர்கள் தங்க அனுமதி!
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், அரசியல் கட்சிகளின் முகவர்கள் 24 மணி நேரமும் தங்கி, கண்காணிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்!
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், அரசியல் கட்சிகளின் முகவர்கள் 24 மணி நேரமும் தங்கி, கண்காணிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்!
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் வாக்குப்பதிவு விவர ஆவண அறைக்குள், பெண் வட்டாட்சியர் உள்ளிட்ட நான்கு பேர் நுழைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலுல்ம மதுரை விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, மதுரைக்கு நேரில் சென்று, தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான நடராஜன், பெண் வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், விரும்பினால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் 24 மணி நேரமும் தங்கலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இவ்வாறு அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களில் தங்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக நடத்த 13 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளதாகவும், சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
10 வாக்குச்சாவடிகளில் மறுத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேதியை தேர்தல் ஆணையமே முடிவு செய்து அறிவிக்கும் எனவும், அமமுக நிர்வாகி தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.