ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். 
ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம். திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்துவிட்டது. சூலூர் தொகுதி குறித்து விரைவில் அறிக்கை அனுப்புவோம். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிந்துள்ள நிலையில் அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது. 


எனவே அரவங்குறிச்சியை தவிர்த்து மீதம் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


மறுபுறம் தேர்தல் நடத்தை விதிகள் அமுல் படுத்தப்பட்டுள்ள தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சுமார் ரூ.30 கோடி ரொக்க பணம் இதுவரை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பிடிப்பட்ட பணம் மற்றும் தங்கத்தில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.4.45 கோடி பணம் மற்றும் 94 கிலோ தங்கம் திருப்பி தரப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.