வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18 அரசு பொது விடுமுறை - tnGovt!
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள், புதுவை உள்பட 40 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தல்களில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18 -ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்து, அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தமிழக அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டுக்கும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல் தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்படுகிறது என்றாலும், தேர்தலுக்கு முந்தைய நாள் 17-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியும், தேர்தலுக்கு அடுத்த நாள் 19-ஆம் தேதி புனித வெள்ளியும் என அரசு விடுமுறை நாளாகும். இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மொத்தம் 5 நாட்கள் தேர்தலின் போது தொடர் விடுமுறை கிடைக்கிறது.