11 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி!
தென்மண்டல IG சைலேஷ்குமார் யாதவ் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
தென்மண்டல IG சைலேஷ்குமார் யாதவ் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி காத்திருப்பு பட்டியலில் இருந்த மனோகரன், திருப்பூர் நகர காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதேப்போல் திருப்பூர் மாநகர ஆணையராக இருந்த நாகராஜன் அவர்கள் சென்னை பயிற்சி பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விரிவான பட்டியல்...
IPS அதிகாரியாக இருந்த மனோகரன் IG பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமை DIG பாஸ்கரன் அவர்கள் IG-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கமிஷனர் நாகராஜன் அவர்கள் காவல்துறை பயிற்சி பள்ளி IG-யாக பொருப்பேற்கின்றார்.
காவல்துறை பயிற்சி பள்ளி IG சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல IG-யாக பொருப்பேற்கின்றார்.
தென் மண்டல IG சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை IG-யாக பொருப்பேற்கின்றார்.
தமிழக காவல்துறை நலன், சென்னை IG டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை கமிஷனராக பொருப்பேற்கின்றார்.
மதுரை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் CBCID சிறப்பு பிரிவு IG-யாக பொருப்பேற்கின்றார்.
தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக இருந்த சேஷாயி அவர்கள் தமிழக காவல்துறை நலன் IG-யாக பொருப்பேற்கின்றார்
சென்னை குற்றப்பிரிவு IG- பாஸ்கரன் அவர்கள் தமிழக பயிற்சி பள்ளி IG-யாக பொருப்பேற்கின்றார்
போலீஸ் தொழில்நுட்ப சேவை DIG மகேந்திர குமார் ரத்தோட் அவர்கள் நெல்லை மாவட்ட கமிஷனராக பொருப்பேற்கின்றார்
காவல்துறை பயிற்சி பள்ளி DIG ஆசியம்மாள் அவர்கள் தொழில்நுட்ப சேவை DIG-யாக பொருப்பேற்கின்றார்.