பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்! தமிழக அரசு!
பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் (saminathan) அறிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் (saminathan) அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் அந்தந்த துறை ரீதியான அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.எதிர்கட்சிகளும் தங்களுடைய கேள்விகளை கேட்கின்றன.அதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் அதற்குரிய பதிலை அளித்து வருகின்றன.
ALSO READ : 7th pay commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள குட் நியூஸ்..!!
இந்நிலையில் இன்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அதில் இன்று செய்தித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் " பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும்
இது தவிர "இளம் பத்திரிக்கையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியமும் அமைக்கப்படும்! என சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
ALSO READ : சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR