தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "பொதுத்துறை அரசு ஊழியர்களுக்கு போனஸாக 8.33% கருணைத் தொகையாக 11.37% வழங்கப்படும்.


லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு போனஸ் மற்றும் கருணை தொகையுடன், அடிப்படை ஊதியத்தில் 20% அளிக்கப்படும்.


மின்வாரியம், போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஊழியர்களுக்கும் , கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20% போனஸ் அளிக்கப்படும்.


அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் அளிக்கப்படும்.


லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கங்களின் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 20%-மும், லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்களின் (நஷ்டமடைந்த) ஊழியர்களுக்கு 10%-மும் போனஸ் அளிக்கப்படும்.


லாபம் ஈட்டிய குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 10% மற்றும் பாடநூல் கழகம், வீட்டுவசதி வாரியம், கல்வியியல் கழகம், கழிவுநீரேற்று கழக வாரியத்தின் ஊழியர்களுக்கு 10% போனஸ் அளிக்கப்படும். 


பிற கூட்டுற வுசங்க ஊழியர்களுக்கு 10%, நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% மற்றும் 10% என பிரித்து அளிக்கப்படும்.


நிரந்தர தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,400 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.16,800 வரையும் அளிக்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு ஊழியர்க்கும் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் தற்காலிக ஊதியமாக ரூ.3000 போனஸ் அளிக்கப்படும். தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.2,400 போனஸ் அளிக்கப்படும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.