ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக ஆரோக்கிய ராஜிவ் அவர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.


இப்போட்டியில், 4x400 மீ கலப்பு குழு ஓட்ட பந்தய இறுதிப் போட்டியில் இந்திய அணியில் முகமது அனாஸ், பூவம்மா, ஹீமா தாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பங்கேற்றனர். 3:15.71 கால அளவில் பந்தைய தூரத்தை கடந்த இக்குழு இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தினை பெற்று தந்தது.


இக்குழுவில் பங்கேற்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் அவர்களுக்கு அவரது திறமையினை பாராட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...