வெள்ளி பதக்கம் வென்ற தருண்-க்கு ரூ.30 லட்சம் -தமிழக அரசு!
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி அவர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்!
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி அவர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்!
ஆசிய விளையாட்டு போட்டியில், 400மீ ஆடவருக்கான தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தருண் அய்யாச்சாமி அவர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்க தொகையாக அறிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
8_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 9-வது நாளான நேற்று தடைதாண்டும் போட்டிகள் நடைப்பெற்றது.
இப்போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, சந்தோஷ் குமார் தமிழரசன் ஆகியோர் இந்தியா சார்பில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இவர்களுடன் மேலும் 6 பேர் போட்டியிட்டனர். இறுதியில் தமிழகத்தின் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கத்தார் வீரர் அப்தேரஹ்மான் சம்பா 47.66 வினாடிகளில் பந்தைய தூரத்தினை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் இன்று வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சத்தினை தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.