இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது. கோவை மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண் 202, தொழில் மு.ஊ (ம) வர்த்தகத் (எ.ஐ.இ.1) துறை நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். 


மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும்.



எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | PT பீரியடில் இனி நோ பாடம்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்


மேலும் படிக்க | 'ஓசி-னா போயிட்டு போயிட்டு வருவியா...' இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடத்துநர்!


மேலும் படிக்க | இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக திகழும் தமிழ்நாடு! சிறப்பாக செயல்படும் தமிழக அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ