திருமணம் செய்பவர்கள், சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறவும் அரசு வழங்கும் பல்வேறு வகையான உதவிகளைப் பெறவும் தங்களது திருமணத்தைப் பதிவு செய்யவேண்டியது தற்போது கட்டாயமான ஒன்றாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் திருமணம் செய்யும் மணமக்கள், தங்களுக்கு இதுதான் முதல் திருமணம் என உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய சான்று பெற்றுச் சமர்ப்பித்துவருகின்றனர்.


சமூக நலத் துறையின் திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கும், கிராம நிர்வாக அலுவலகர்களிடம் சான்றுக்காக அணுகுகின்றனர். ஆனால், இதுபோன்ற சான்றிதழ்களை வழங்க, சட்டப்படி எவ்வித அரசாணையோ,  வழிகாட்டுதல்களோ இல்லை எனவும் வெறுமனே பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையிலேயே இத்தகைய சான்றிதழ்களைக் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.


அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமணச் சான்று வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சார் - பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்கள், திருமணப் பதிவின்போது கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து ‘முதல் திருமணச் சான்று’ பெற்று வருமாறு பொதுமக்களைக் கேட்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | எக்ஸாம் ஹாலில் பவர் கட்! - செல்போன் டார்ச்சில் தேர்வு எழுதிய மாணவர்கள் வீடியோ!


 


இதற்குப் பதிலாக பொதுமக்கள் வருவாய்த் துறை சார்பில்  இ - சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களைப் யன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே திருமணம் தொடர்பான சான்றுகளைப் பெற விழைவோர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோராமல்,  இ - சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | உருவாகிறது வாஜ்பாய் பயோபிக்! - லீடிங் ரோலில் நடிக்கப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR