இந்த ஆண்டு இறுதிக்குள் விவாசாயிகளுக்கு 11,000 மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதா? என கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இதுவரை எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டு எத்தனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன? எனவும் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, கடந்த ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10,000 மின் இணைப்புகள் என நிர்ணயிக்கப்பட்டு 19,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. கஜா புயல் காரணமாக கடந்த ஆண்டு தட்கல் முறையில் மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை என குறிப்பிட்டு பேசினார்.


இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பத்தாயிரம் மின் இணைப்புகள், மற்றும் கடந்த ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் இணைப்புகள் என மொத்தமாக இந்த ஆண்டு 11,000 மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் அளிக்கப்படும் என தெரிவித்தார்.


இதற்கிடையில் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு இனி இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகே அளிக்க முடியும் என கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதற்கான பதிவினை விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.