உலகளாவிய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையில் தமிழ் வளர் மையம் என்ற அமைப்பு தமிழ் வளர்ச்சத்துறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேப்போல் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இசை மரபுகளையும் அதன் பண்பாட்டுக் கூறுகளையும் உலகத்தமிழர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.


இவை தொடர்பாக அரசின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசுக்கு மூன்று நாட்கள் (07.09.2018 - 09.09.2018) அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.


பிரான்சு நாட்டின் முக்கிய மாநிலமான சென்டர் வால்டி லோரி, தமிழ்நாட்டுடன் பண்பாட்டு பரிமாற்றத்தில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் பண்பாட்டுத்துறை இந்த மாநிலத்துடன் இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பாக 07.09.2018 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.


தமிழக முதல்வர் அறிவிப்பான சொற்குவை திட்டம் தொடர்பாக பிரான்சு நாட்டின் தமிழ் வல்லுனர்களை சந்திக்கும் நிகழ்வும் இந்த பயணத்தில் நடைபெறவுள்ளது.


அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பாரீசு நாட்டு கிளையான பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்பாணம் பல்கலைகழகம் இணைந்து நடத்தும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டினை அமைச்சர் அவர்கள் 08.09.2018 அன்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றார்.


ஐரோப்பிய கண்டத்திலுள்ள 20 நாடுகளைச் சேர்ந்த பெரும் தமிழறிஞரகள், பேராசிரியப் பெருமக்கள் ஆகியோர் கலந்துக்கொள்ளும் மாபெரும் தமிழ் மாநாட்ட அமைச்சர் துவங்கி வைத்து திறுக்குறளை உலகின் நூலாக அறிவிக்கக்கோரும் விண்ணப்பத்தை யுனெஸ்கோவின் இயக்குநரிடன் இம்மாநாட்டில் அளிக்கவுள்ளார்.


திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்கக்கோரும் சான்றுகள் தமிழக அரசின் சார்பில் யுனெஸ்கோவில் சமர்பிக்கப்படவுள்ளது என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.