Covid Vaccine for free Everyone: கோவிட் -19 தடுப்பூசிகள் தயாரானதும் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி (Covid-19 Vaccine) வழங்கப்படும். நமக்கான தடுப்பூசி கிடைத்தவுடன், அனைவருக்கும் அதை தமிழக அரசு இலவசமாக வழங்கும்" என்று முதல்வர் புதுக்கோட்டை (Pudukkottai) மாவட்ட நிகிழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது தெரிவித்தார். 


இருப்பினும், 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் (TN Assembly Election 2021) வர உள்ளது. இன்னும் 6, 7 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடுமா? என்பது கேள்விக்குறியே. அதன்பிறகு தடுப்பூசி தயாராக இருந்தால், ஆட்சிக்கு வரும் கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். திமுக (DMK) அல்லது அதிமுக (AIADMK) இரண்டு கட்சியில் எந்த கட்சி "கொரோனா தடுப்பூசி இலவசம்" என்ற செய்தியை உண்மையாக்கப் போகிறார்கள் என்பதையு பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ALSO READ |  COVID தடுப்பூசிக்காக காத்திருக்க முடியாது; ஆனால் உயிர்களை காக்க வேண்டும்: WHO


வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான (Bihar Assembly Election 2020) பாரதீய ஜனதா தனது வாக்கெடுப்பு அறிக்கையில், தடுப்பூசி தயாரானவுடன் அதை இலவசமாக விநியோகிப்பதாக உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். 


"COVID-19 தடுப்பூசி தயாரானவுடன் பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். இது எங்கள் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியாகும்" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார். வாக்கு வங்கிக்காக "இலவச தடுப்பூசி" என்ற பிரசாரத்தை வாக்குறுதியாக மாற்றுவதன் மூலம் பாஜக (BJP) நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 


இதற்கிடையில், தமிழகத்தில் இன்று 3,087 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 845 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.


ALSO READ |  Covid 19 தடுப்பூசி தொடர்பாக வெளியான முக்கிய தகவல்!!


தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,2,527ஆக உயர்வு. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்தது.


இந்தியாவில், இரண்டு தடுப்பூசி சோதனைகள் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. ஒன்று மூன்றாம் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR