நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் கவனமாக இருத்தல் வேண்டும் -விஜயபாஸ்கர்!
கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைக் கட்டுக்குள் வைத்து முறையான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைக் கட்டுக்குள் வைத்து முறையான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
COVID-19 நோயின் மூன்று தனித்துவமான கட்டங்களை அடையாளம் கண்ட விஞ்ஞானிகள்...
வயதானவர்கள், குறிப்பாக, இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் - கொமொர்பிடிட்டி, குறிப்பாக வயதானவர்கள்... தயவுசெய்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும்போது, கொரோனா தாக்கினாலும் அதிலிருந்து வெளியே வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், புதிதாகப் பிறந்தவர் முதல் முதியோர் வரை பல்வேறு வயது நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். தொற்றுநோயைக் கையாள சுகாதார ஊழியர்கள் அயராது உழைத்து வருகிறார்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் எந்த விமர்சனமும் நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறும் பதாஞ்சலி...
"அரசியல் கட்சிகள் இந்த நோயைப் பற்றி அரசியல் செய்யக்கூடாது, இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல.. அரசாங்கம் எவ்வளவு தீவிரமானது என்பது அனைவருக்கும் தெரியும்" என்று தொற்றுநோயைக் கையாள்வது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டார்.