தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு மே மாதம் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கி 17 உயிர்களை பலி வாங்கியது (கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 3 பேர்). கேரளாவரை தாக்கிய இந்த நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. 
வவ்வால்கள், அணில்கள் ஆகியவை கடித்துப்போடும் பழங்களை எடுத்து சாப்பிடும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இந்நோய் பரவுவதாக தெரிய வந்துள்ளது.


இந்த நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் மூளை வீக்கம் போன்ற நரம்பியல் பிரச்சினைகளும் ஏற்படும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோமா நிலையை அடைவார்கள். இறுதியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றது.


இதற்கிடையே தற்போது கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கி உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் 6 பேர் அடங்கிய மத்திய குழு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


மேலும் வவ்வாள்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதால் பழங்களை நன்கு கழுவி சாப்பிடவேண்டும்.  தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.