முந்தைய அனைத்து பதிவுகளையும் நொறுக்கி, தமிழ்நாடு இன்று 938 COVID-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை 21,000-ஐத் தாண்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் சமீபத்திய மருத்துவ அறிக்கையின் படி மாநிலத்தின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் COVID-19 பரவுதல் குறித்து பேசுகறையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று பதிவான 938 வழக்குகளில் 616 வழக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளது. 


சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாளை முடிவடையும் பூட்டுதலை நீட்டிக்க அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வந்த நேரத்தில் இன்றைய புள்ளிவிவரங்கள் வந்துள்ளது. அரசு தகவல்கள் படி சனிக்கிழமையன்று 6 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற நோய் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மற்றும் மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 160-ஆக உயர்ந்துள்ளது.




மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மொத்தம் 687 கோவிட் -19 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். அரசாங்க மருத்துவ புல்லட்டின் படி மொதம் 12,000 COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.