தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது. உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் என்றும், வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை உள்ள வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது, இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேசமயம், திருவள்ளூர் முதல் தேனி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பல்வேறு மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செண்டி மீட்டரும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.