சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலங்கள் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

India Today ஊடகம் சார்பில் 2018-ஆம் ஆண்டிற்கான State of the States என்ற தலைப்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகிய பிரிவுகளில் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. 


குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு விருதினை வழங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை பெற்றுக் கொண்டார். அதேவேலையில் வளர்ந்து வரும் சிறிய மாநிலங்கள் பிரிவில் புதுவை அரசு விருதுகளை குவித்துள்ளது. கல்வி, உள்கட்டமைப்பு, ஆரோக்கியம், விவசாயம் ஆகிய பிரிவுகளில் புதுவை அரசிற்கு விருது வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, அஸாம் முதல்வர் சர்பநந்தா சொனவால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


விழாவில் பேசிய முதல்வர், இதுபோன்ற விருதுகளை பெறுவதன் மூலம் தமிழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.