தமிழக உயர் கல்வி அமைச்சர் KP அன்பழகன் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனே தமிழ்நாட்டில் இரண்டு MLA-க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயணிகள் ரயில்களை விரைவு வண்டிகளாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் -PMK!...


உத்தியோகபூர்வ வட்டாரத்தின்படி, 'அமைச்சர் புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்று CT ஸ்கேன் எடுத்துள்ளார். பின்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், அதன் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவல்கள்படி அவர் லேசான தொற்று அறிகுறியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.'


சமீபத்தில், ஆளும் அதிமுக அரசின் சட்டமன்ற உறுப்பினர் K பழனி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநில சட்டமன்றத்தில் ஸ்ரீபெரம்புதூரை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், தமிழகத்தில் கொரோனா தொற்று பெற்ற இரண்டாவது MLA ஆவார்.


இவருக்கு முன்னதாக எதிர்க்கட்சியான திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் J.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரை விட்டார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மூன்றாவது MLA-வாக KP அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அமைச்சர் தமிழக COVID-19 கட்டுப்பாட்டு குழுவின் ஒரு பகுதியாக உள்ளார் மற்றும் வடக்கு சென்னையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்தார். 


பரிசோதனை பட்டியலை நாள்தோறும் வெளியிடுவதில் என்ன சங்கடம்?: MKS...


முன்னதாக புதன் அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற COVID-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மறுஆய்வுக் கூட்டத்தில் KP அன்பழகன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் SP வேலுமணி, T ஜெயக்குமார், R காமராஜ், C விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.


சுகாதார செயலாளர் J.ராதாகிருஷ்ணன், சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ், நகர காவல்துறை ஆணையர் AK விஸ்வநாதன் மற்றும் பிற IAS அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.