கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது - புதிய சட்டம்
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்ட மசோதா தாக்கல் செய்தார்.
ALSO READ : 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
இதற்கு 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக்கொடைகள் சட்டத்தில் சட்டத்தை திருத்தம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமய நிறுவனத்தின் பொதுவிவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள எவரும் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக குற்றவியல் புகார் தாக்கல் செய்யலாம் என்றும் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கூறப்பட்ட குற்றத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமுன்வடிவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR