இஸ்லாமிய பெண்கள் பாஜவிற்கு தான் ஒட்டு போடுவார்கள் - விஜயதாரணி!
இஸ்லாமிய பெண்கள் வேறு யாருக்கு ஓட்டு போட சொன்னாலும் ஓட்டு போட மாட்டார்கள். உறுதியாக பாஜகவிற்கு மட்டும்தான் ஓட்டு போடுவார்கள் - விஜயதாரணி பேட்டி.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சமீபத்தில் டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமான மூலம் தமிழகம் திரும்பிய அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தேசியத் தலைவர் நட்டா அவர்கள் தலைமையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகாலம் பணியாற்றிய நபர் நான். ஆனால் சமீப காலமாக நீங்களே பார்த்திருப்பீர்கள் பல பிரச்சனைகள் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளது. பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டுள்ளது. என்னை ஒருத்தியை தவிர வேறு யாரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட கிடையாது.
மேலும் படிக்க | கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!
கடந்த 14 ஆண்டு காலமாக நான் சட்டமன்ற உறுப்பினராக இயங்கி வருகிறேன். என்னை கூட அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு தான் அவர்களது செயல்பாடுகள் உள்ளது. தேசிய கட்சியில் இருந்து நான் இன்னொரு தேசிய கட்சிக்கு சென்று உள்ளேன். அதே நேரம் அங்கு உள்ள செயல்பாடுகள் என்பது பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் அரசியல் களத்தில் பணியாற்றுவதற்கு சிரமத்தை உண்டு பண்ணுகிறார்கள். அதற்கு வேறு என்ன வழி அதே நேரம் என்னுடைய உழைப்பு மாணவர் காங்கிரஸ் பருவத்தில் இருந்து தொடங்கி கட்சிப் பணியாற்றி வருகிறேன். 37 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய நபர் நான் எந்த கட்சிக்கும் செல்லாதவள். ஆனால் இப்போது இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றால் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்த நோக்கமும் இல்லாமல் வேலை பார்த்தவள் நான்.
ஆனால் ஒரு தலைமை பதவி என்று வந்தால் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் தான் தவறானது. ஏன் பெண்கள் எதுவும் செய்ய முடியாதா? எங்களால் எதுவும் முடியாதா? சட்டமன்ற உறுப்பினரோடு நிற்க வேண்டுமா தலைமை பதவிக்கு வந்து மக்கள் பணியாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும். அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் இந்த காங்கிரஸ் கட்சியினர். அந்த ஒரு நிலைப்பாடு கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அங்கீகாரம் என்பது மறுக்கப்பட்டதாக இருக்கிறது. என்னை போன்ற பல ஆண்டுகாலம் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கிறது. இளம் பெண்கள் எப்படி அந்த கட்சிக்கு செல்வார்கள். பாஜகவை பொறுத்தவரை நீங்களே பார்த்திருப்பீர்கள் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். பல மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
அவர்கள் நல்லபடியாக கட்சிக்கு பணியாற்றுகிறார்கள் மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் சிறப்பாக வேலை பார்த்துக் கொண்டுள்ளனர், தலைமை பண்புடன் செயல்பட்டு கொண்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது. பாரதிய ஜனதா கட்சி அதன் வெளிப்பாடு தான் என்னுடைய நிலைப்பாட்டிற்கு காரணம். அதனால் தான் இன்றைக்கு நான் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன். நரேந்திர மோடி அவர்கள் பெண்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கி உள்ளார்கள். விரைவில் அமல்படுத்தப்படும் இஸ்லாமிய பெண்களுக்கான முத்தலாக் பிரச்சனைகளுக்கு தீர்வு. அதுமட்டுமல்லாது இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை வாங்கி தந்து இருக்கிறார்கள். இன்றைக்கு இஸ்லாமிய பெண்கள் வேறு யாருக்கு ஓட்டு போட சொன்னாலும் ஓட்டு போட மாட்டார்கள். உறுதியாக பாஜகவிற்கு மட்டும்தான் ஓட்டு போடுவார்கள்.
தாமரைக்கு தான் அவர்கள் ஓட்டு. அவர்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது. இதனால் அவர்கள் மனதில் பாஜக மற்றும் பிரதமரும் தான் இருக்கிறார்கள். அதுதான் எங்கள் மனதிலும் இருப்பதற்கு உண்டான நியாயம். குறிப்பாக பெண்களுக்கு பதவிகள் காங்கிரஸ் கட்சியில் கொடுப்பதில்லை. எந்த பதவி வந்தாலும் அவர்கள் தடுக்கிறார்கள். அதுதான் உண்மை அது மட்டும் காரணம் அல்ல அடுத்தடுத்து வளர்ச்சியும் கூட எங்களுடைய பாராளுமன்ற மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சி தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற வளர்ச்சியை பார்த்தால் மக்களுக்கு நன்றாக தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரத யாத்திரை சென்று நடைபயணம் சென்று மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய சீரிய முயற்சியால் இன்றைக்கு பாஜக பெரிய அளவில் சாதித்து உள்ளது. அதுவும் ஒரு காரணம் தான் என்னை போன்றவர்கள் பாஜகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது இது போன்ற காரணங்களும் தான்.
மேலும் படிக்க | சென்னையை உலுக்கிய ஆணவக் கொலை... மனதை அதிர வைக்கும் தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ