தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள பி.பி.ஆர் நர்சிங்கல்லூரி ஹாலில் தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்க ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் டாக்டர் பிபிஆர் என்.பாலாஜி தலைமை தாங்கி உரையாற்றினார். 


இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,... தமிழ்நாடு சுகாதார துறையின் அனுமதி இல்லாமல், அடிப்படை வசதிகளின்றி, ஆய்வுக்கூடங்கள், ஆடிட்டோரியம், போதுமான ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் போன்றவை இல்லாமல் போலியாக இயங்கி வரும் நர்சிங் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயின்று அவர்கள் வழங்கும் சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்த பின்னர், அசம்பாவிதங்கள் நடந்தால், போலி நர்சு என்ற அவப்பெயர்தான் கிடைக்கும். எனவே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நர்சிங் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்க வேண்டும். முதல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் 3 வருட டி.ஜி.என்.எம். படிப்பிற்கும் வழங்கப்பட வேண்டும். 


மேலும் மருத்துவக்கல்வி இயக்குனரகம் மற்றும் நர்சிங் தேர்வு வாரியம் ஆகியவை தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருந்தது போன்று அந்தந்த மாவட்ட அளவில் டி.டி.எச்.எஸ். அலுவலகம் மூலம் சமுதாய செவிலியர் பயிற்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற அரசு ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளன. 


இந்த ஆலோசனை கூட்டத்தில், வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களின் தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளி சங்க தலைவர் டாக்டர் ஜே.பி.கே.எம் பரந்தாமன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முகமது முஸ்தபா, கவிஞர் சீனிவாசன், டாக்டர் பெஞ்சமின் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.