சத்துணவு பணியாளர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
தமிழக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது!
தமிழக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது!
தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம், ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆனால் தமிழக அரசு, சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. விரைவில், இந்த கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து இந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.